கிரிக் பார்டடி என்ற கன்னடம் மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தண்ணா. இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது.
அதன்பிறகு, அஞ்சனி புத்ரா, சமக், சலோ, கீத கோவிந்தம், போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
அதுமட்டுமல்லாமல் கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்தில் இவருக்கென ஒரு சில ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன. இவர் கன்னடம், தெலுங்கு, போன்ற இரு மொழிகளில் மட்டும் நடித்து ரசிகர் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சமீப காலங்களாக மீண்டும் பட வாய்ப்புக்காக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்து உட்கார்ந்தவறு போஸ் கொடுத்து மக்களையும் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.
