வாரிசு பட நடிகை “ராஷ்மிகா மந்தனாவின்” முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? பிரபல விமர்சகர் வெளியிட்ட தகவல்

0
rashmika-mandanna
rashmika-mandanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர் ராஷ்மிகா மந்தனா. முதலில் கிரிக் பார்ட்டி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் தெலுங்கில் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

மேலும் இந்த படங்களில் இவர் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் தனது அழகையும் காட்டி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார் தொடர்ந்து தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைத்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்த நிலையில் இனி தமிழ் பக்கம் திரும்புவாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை பெற்று இருந்தார் அந்த படம் வெளிவந்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியதைத் தொடர்ந்து தற்பொழுது ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன.

2023 – ல்  நடிகை ராஷ்மிகா மந்தன்னா கைவசம் அனிமல், புஷ்பா 2 தி ரைஸ் மற்றும் ஒரு தெலுங்கு இயக்குனர் படம் ஒன்றிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது கார், வீடு போன்றவற்றை வாங்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு குறித்து..

பிரபல திரைப்பட விமர்சகர் உமர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் சொன்னது ராஷ்மிகா மந்தனாவின் சொத்து கிட்டத்தட்ட சுமார் 125 கோடி இருக்கும் என கூறியுள்ளார்  மேலும் boy friend குறித்தும் இதில் சர்ச்சை கூறிய வகையில் பதிவிட்டு உள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த பதிவை..