அரபி குத்து பாடலுக்கு அரை கால் டவுசருடன் பீச்சில் ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் வீடியோ.!

புஷ்பா படத்தில் நடித்து பிரபலமடைந்த ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை  கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் இவரது இயக்கத்தில் புதிய திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், கிங்ஸ்லி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அரபி குத்து பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இந்தப் பாடலை ஜோனிட காந்தி குரலில் வெளியானது இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று யூடியூபில் ட்ரேண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் விஜய்யின் மெர்சலான நடனத்தைப் பார்த்து பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் யாஷிகா ஆனந்த்  மணிமேகலை என பல நடிகர் நடிகைகள் நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த வகையில் தற்பொழுது புஷ்பா திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா கடற்கரை ஓரத்தில் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதற்கு முன் கீர்த்தி சுரேஷ் அவர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=wKhvOV4i5fI

Leave a Comment