ரசிகர்களுடன் வாரிசு படத்தை பார்த்து அலப்பறை செய்த ராஷ்மிகா மந்தனா.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கிறது ஆனால் ஒரு சில இடங்களில் சொதப்பி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

குடும்ப செண்டிமெண்டாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதய தினத்தில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு தங்களுடைய படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று வாரிசு படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் பலர் வாரிசு படத்தை பார்த்து வந்தனர். அந்த வகையில் நேற்று வாரிசு படத்தை கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் இந்த படத்தை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் வாரிசு படத்தை முதல் ஷோவில் ரசிகர்களுடன் பார்த்து ரசிகர்களோடு ரசிகையாக ஜாலியாக படத்தை பார்த்து விசில் அடித்து கைதட்டி அலப்பறை செய்துள்ளார் அவர் வேற யாரும் இல்லை வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தநாதன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வாரிசு படம் முடிந்த நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா வந்தனா நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அது ஆனால் உண்மையான தகலா என்று பார்த்தால் இது குறித்து படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதே.

Leave a Comment