திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘எமகாதகி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஷ்மிகா மந்தானா.!

மிகவும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள யமகாதேசி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது இந்த படத்தில் நடிகர் வெங்கட் ராகுல் மற்றும் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் தயாரிப்பில் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் யமகாதகி இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக வந்தது.

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோர்களின் கூட்டணியில் இந்த திரைப்படம் தயாராகி உள்ளது இவ்வாறு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

அதாவது இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்க இந்த நண்பர்களுக்கு இந்த கதை மிகவும் பிடித்து போகவே இந்த படத்தினை நாங்களே இணைந்து தயாரிக்கிறோம் என முன்வந்துள்ளார்கள் இவ்வாறு சினிமா மீதான உண்மையான காதலில் தரமான ஒரு திரைப்படத்தினை தர வேண்டும் என்பதற்காக இந்த படத்தினை இவர்கள் தயாரித்து உள்ளனர்.

மேலும் புது முகங்களால் உருவாக்கப்படும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது மேலும் ரசிகர்களை ரசிக்க வைப்பதற்காக இந்த படம் உருவாகியுள்ளதாகவும் பட குழுவினர்களாக தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரூபா கொடுவயூர் நடித்துள்ளார்.

yemakathaki
yemakathaki

மேலும் இவரைத் தொடர்ந்து நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர் ராஜு, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய் பிரதீப், ராமசாமி உள்ளிட்ட இன்னும் பலரும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது கிராமத்து பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் டீசர், ட்ரைலர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு போன்ற தகவல்கள் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக வெளிவர இருக்கிறது இவ்வாறு உருவாகியுங்கள் இந்த படத்தினை நைசாட் மீடியா ஒர்க்ஸ் அண்ட் சாரங்கு பிரதர்ஸ் புரொடக்சன் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.

Leave a Comment