ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகரை அப்படி இப்படின்னு புகழ்ந்து தள்ளியுள்ளார்.! அந்த நடிகரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்து உள்ளனர்.

ஒரு நடிகரின் நடிப்பை பிடித்துவிட்டால் அந்த நடிகையை நம் மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதும் உண்டு அப்படி பிறமொழி நடிகர், நடிகைகளையும் ஆதரவு கொடுப்பதோடு அவர்கள் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் பிறமொழிப் படங்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிவைத்தவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இவர் ஏற்கனவே இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் இவர் இந்த படத்தில் நடித்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறியது படம் வெளிவந்து ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பும் நன்றாக இருந்தது என ரசிகர்கள் கூறினார் இதை தொடர்ந்து அவர் மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் “புஷ்பா” என்ற திரைப்படத்தில் இவர் நடிக்கிறார்.

முதன்முறையாக அல்லு அர்ஜுனுடன் இவர் இணைந்துள்ளதால் தெலுங்கு ரசிகர்களும் தற்போது ஆரவாரத்துடன் இருக்கின்றனர். சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும்  இவர் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் நீங்கள் புஷ்பா திரைப்படத்தில் நடிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

இந்த திரைப்படத்தில் நீங்கள் அல்லு அர்ஜுன நடிக்கிறீர்கள் அவரைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் இனிமையானவர், எளிமையானவர் என்று புகழ்ந்து தள்ளினார் இதனால் தெலுங்கு ரசிகர்கள் புகழின் உச்சியில் தற்போது தெரிவிக்கின்றனர்.

Leave a Comment