புதிய சொகுசு காரை வாங்கியதை தொடர்ந்து புதிய வீடு வாங்கிய ராஷ்மிகா மந்தனா.! எங்க வாங்கியுள்ளார் தெரியுமா.? வாய்பிளந்த ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. சொந்த மொழியான கன்னடத்தில் முதல் படத்தில் நடித்திருந்தாலும் அதன்பிறகு அவரை தட்டி தூக்கியாது தெலுங்கு சினிமா. தெலுங்கு சினிமாக்களில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதோடு மட்டுமல்லாமல் அங்கு செல்ல குழந்தையாக இருந்து வருவதால் வரவேற்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

மேலும் டாப் நடிகர்கள் படங்களும் ஈசியாக அவருக்கு வருகின்றன. ஆள் பார்ப்பதற்கு சூப்பராகவும் கும்முனும் இருப்பதால் தமிழிலும் தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதன்பிறகு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்துள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் பகத் பாசில் நடிக்கும் புதிய படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட புஷ்பா திரைபடத்தில் அவரது கதாபாத்திரத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.அதை தொடர்ந்து ஹிந்தி பக்கத்திலும் இவர் அடியெடுத்து வைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இந்திய சினிமாவில் கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக மாறி கொண்டுவருகிறார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவைத் தாண்டியும் ராஷ்மிகா மந்தனா அவ்வா பொழுது திடீரென குட்டையான உடைகளில் வலம் வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் நடிகையாக தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ராஷ்மிகா இருந்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா சினிமா எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு படத்தின் கதையையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார் இது இப்படி இருந்தாலும் நிஜ வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் என்பதை உணர்ந்த ராஷ்மிகா தான் சம்பாதிக்கும் காசுகளை வைத்து விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி தள்ளிய நிலையில் தற்பொழுது ரஷ்மிகா மந்தனா திடீரென கோவாவில் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்த வீட்டில் நீச்சல் குளம் மற்றும் பக்கத்தில் இருக்கும் புத்தர் சிலையின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rashmika mandanna new hoouse

Leave a Comment

Exit mobile version