நடிக்க தெரிஞ்ச உனக்கு.. காதலர் தினத்தை யார் கூட கொண்டாடனும் தெரியலையே “ராஷ்மிகா மந்தனாவை” கலாய்க்கும் ரசிகர்கள்

rashmika madanna
rashmika madanna

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா “கிரிஷ் பார்ட்டி” என்ற படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தெலுங்கில் இவர் நடித்த கீதகோவிந்தம், டயர் காம்ப்ரேட் போன்ற படங்கள் அடுத்தடுத்த வெற்றியால் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி அதிகரித்தது.

அதன் காரணமாகவே இது தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் கிடைத்தது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தற்போது வெற்றி கண்டு வருகிறார். ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா, வாரிசு போன்ற படங்கள் கூட மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் புஷ்பா 2 திரைப்படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி சினிமா உலகில் வெற்றியை கண்டு வரும் ராஷ்மிகா மந்தனாவை அவ்வபொழுது நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசுவது, கிசுகிசுகள் கிளம்புவது வழக்கம் அதிலும் குறிப்பாக விஜய் தேவர்கொண்டவும், ராஷ்மிகா மந்தனாகவும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

ஏன் கடைசியாக கூட மாலத்தீவில் இவர்கள் ரகசியமாக வந்து சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால் எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ராஷ்மிகா மந்தனா தனது காதலருடன் பொழுதை கழிப்பார் என்று பார்த்தால் நாயுடன் வீட்டில் குஞ்சு குஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் வீடியோவை போட தேவையில்லை நாங்கள் காதலர் தினம் அதுமாய் உங்களுடைய காதலரை காட்டுகிறீர்கள் என நினைத்து ஆர்வமாக வந்தோம் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்