தளபதி 66 : திரைப்படத்தில் ஹீரோயின் ராஷ்மிகா கிடையாது.? இந்த நடிகை தானாம் வெளியான லேட்டஸ்ட் தகவல்.

தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்.  இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே செம்ம ட்ரெண்ட் ஆகியது.

அதில் முதல் பாடலாக வெளியான அரபி குத்து பாடல் செம வைரல் ஆகியதை தொடர்ந்து சமீபத்தில் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகியது. மேலும் இந்த படத்தின் வெளியீடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் செம குஷியில் உள்ளனர்.

அண்மையில் வெளிவந்த அஜித்தின் வலிமை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் அதிகளவு வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில் அதனை பீஸ்ட் படம் முறியடிக்குமா என சினிமா வட்டாரங்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து விஜய் அடுத்து அடுத்து நடிக்க உள்ள திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அப்படி விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் மேலும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்க உள்ள மற்ற பிரபலங்களை தேர்வு செய்து வருகின்றனர். அதில் சில வாரங்களாகவே விஜய் 66 படத்தின் ஹீரோயின் பற்றி தகவல் வெளியாகி வருகின்றன.

மேலும் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என இருந்த நிலையில் பின்பு ஒருகட்டத்தில் ராஷ்மிகா மந்தனாவை  உறுதி செய்துள்ளனர் எனவும் செய்தி வெளிவந்துள்ளது ஆனால் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தமன்னா இதற்கு முன் விஜயுடன் இணைந்து சுறா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment