தமிழ்நாட்டு காரியாக மாற போகும் ராஷிம்கா மந்தனா.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு என்ட்ரி ஆனவர் ராஷிம்கா மந்தனா. ஆனால் இவர் வருவதற்கு முன்பு இவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது அதற்கு காரணம் இவர் தெலுங்கில் நடித்த ஒவ்வொரு படமும் ரசிகர்களை கவரும்படி இருந்ததால் தமிழ் ரசிகர்களின் இவரது ரசிகராக மாறிவிட்டனர்.

இவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பொழுது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தனர். சுல்தான் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ராஷ்மிகா மந்தனா வின் வரவேற்ப்பை கொண்டாடினர் மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசை தெரிவித்துள்ளனர்.

சுல்தான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் எப்பொழுது தமிழ் சினிமாவில் வந்து நடிப்பேன் என நினைத்துக்கொண்டிருந்தேன் அது இந்த திரைப்படத்தில் நிறைவேறிவிட்டது என கூறினார்.

இப்படியிருக்க சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா எனக்கு தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது விரைவில் இங்கு மருமகளாக வருவேன் என கூறினார் அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு சாப்பாடு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என கூறினார்.

இச்செய்தியை கூறியதும் ரசிகர்கள் பலரும் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா அல்லது யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என தற்போது கேட்க ஆரம்பித்துவிட்டனர் இது இப்படி இருந்தாலும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள நடிகைகள் பலரும் இதுபோன்று சொல்வது வழக்கம் தான் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

Leave a Comment