அடுத்ததாக முரட்டு நடிகரின் படத்தை இயக்க போகும் பா ரஞ்சித்.!

நடிகர் விக்ரம் கதாநாயகனாக மட்டுமல்லாமல் திரைபட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் தமிழ் சினிமாவில் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான சேது திரைப்படத்தில் நடித்து சினிமாவின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ஒரு சில திரைப்படங்களில் ஒவ்வொரு கெட்டப் போட்டு நடித்து வந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அந்த வகையில் தற்போது சப்போட்டா படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தின் தற்போது விக்ரம் அவர்கள் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பா ரஞ்சித் அவர்கள் சார்பட்டா எனும் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார்.

vikram

அதனைத் தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை  உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கு முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ளார்.

இதையடுத்து பா.ரஞ்சித் அவர்கள் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படம் ஒரு ஆக்ஷன் திரைப் படமாக உருவாக உள்ளது என்ற தகவல் கூறப்படுகிறது.

இந்த கதையை ஆரம்பத்தில் பா ரஞ்சித் அவர்கள் இளைய தளபதி விஜயிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இப்போது சியான் விக்ரம் அவர்கள் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது பா ரஞ்சித் அவர்கள்  படப்பிடிப்பில் கொஞ்சம் பிஸியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version