பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினியை பலரும் டிடி என சுருக்கமாக கூப்பிடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் நமது தொகுப்பாளினி சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் இவ்வாறு வெளிவந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் சர்ச்சைக்கு இடம் கொடுத்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆனால் இவர்கள் இருவருமே சம்சரா படத்தின் பிரமோஷனுக்காக சூட்டிங் சென்ற போது தான் ரம்பீர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் திவ்யதர்ஷினி மற்றும் ரம்பீர் ஆகிய இருவரும் இருக்கும் பிரமோஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அதில் நமது நடிகை shamshera படத்தின் பிரமோஷன் செய்வதாக கூறி மூச்சு விடாமல் நீண்ட நேரம் பேசி உள்ளார்.
இவ்வாறு திவ்யதர்ஷினி நீண்ட நேரம் மூச்சு விடாமல் பேசியதை பார்த்த ரன்பீர் இதற்கு பெயர் பிரமோஷனா என அவரை கோபமாக துரத்தி இருக்கிறார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக டிடி முதலில் சிறு சிறு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வந்தார் ஆனால் சமீபத்தில் அவருடைய பேச்சு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முறை ஆகியவை அனைவருக்கும் பிடித்து போனதன் காரணமாக தற்பொழுது திரைப்படங்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்.
மேலும் திவ்யதர்ஷினி தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.