இந்த முரட்டு சிங்கத்தை அடக்க போகும் புள்ளிமான் இவரா.? ராணாவுக்கு நிச்சயதார்த்தமா.? இதோ அவரே வெளியிட்ட ஆதாரம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தார், அதேபோல் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, இந்த நிலையில் சமீபத்தில் ஆர்கிடெக்ட் மிஹீக்கா என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நடிகர் ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமீபத்தில் செய்தி பரவியது.

ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் இன்று நடிகரான ராணா இட்ஸ் ஆபீஷியல் என தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மிகவும் வைரலானது இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நினைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் நானி அவரிடம் நிச்சயம் முடிந்து விட்டதா என கேட்டுள்ளார் அதற்கு ராணா இது திருமணத்திற்கு முன்பாக இரு குடும்பமும் சேர்ந்து பரிசுப் பொருளையும் அன்பையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நிச்சயதார்த்தம் இல்லை என்று விளக்கம் தெரிவித்தார்.

புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

rana-got-engaged-with-girlfriend
rana-got-engaged-with-girlfriend

Leave a Comment