Rana : பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் பெற்றது, இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் மற்றும் ராணா இவர்களின் இருவரின் கதாபாத்திரமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
பாகுபலி படத்திற்காக பிரபாஸ் மற்றும் ராணா உடலை தாறுமாறாக ஏற்றிருந்தார்கள், இந்த நிலையில் பிரபாஸ் அடுத்ததாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் ராணா தாறுமாறாக ஏற்றிய உடம்பை அதிரடியாக குறைத்துள்ளார், இப்பொழுது ராணாவை பார்த்தாள் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார், அதாவது ஐ விக்ரம் அளவிற்கு தனது உடலை பாதியாக குறைத்துள்ளார்.

ராணா தற்போது என்டிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் இந்தத் திரைப்படத்திற்காக அவர் தனது உடலை குறைத்துள்ளார். இதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது, அதற்காக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் சிகிச்சை பெற்றர் ஆனால் பிரச்சனை தீராததால் மருத்துவம் பார்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
