ரம்யாபண்டியன் பிக் பாஸ்க்கு போய்ட்டாங்க!! வெளிவந்த வீடியோ ஆதாரம்!! வைரலாகும் வீடியோ.

0

ramyapandiyan confirmed as a bigboss contestant video: ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ரம்யா பாண்டியன். இவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த ஆண்தேவதை திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் சமீப காலங்களாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு காமெடி ஷோவில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் 4 நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது ரம்யா பாண்டியன் பங்கேற்க உள்ளார் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது,

ஏனென்றால் தற்பொழுது கலக்கப்போவது யாரு ப்ரமோ வெளிவந்தது. அதில் ரம்யா பாண்டியன் இல்லை அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன். தற்போது அவரின் எந்த ஓரு புகைப்படமும் வெளிவராததால் இவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.இவர் இருக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.