சோகக்கதையை விளையாட்டுத்தனமாக கூறிய பிக்பாஸ் தலைவி.!! அதன் விளைவு என்ன தெரியுமா..

Ramya pandiyan : பிக்பாஸ் நான்காவது சீசனில் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வாகியவர் ரம்யா பாண்டியன் தன்னுடைய சோக கதையை விளையாட்டுத்தனமாக கூறி எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் தங்கள் சோகக் கதையை சொந்த கதையை சொல்லி நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு இதுதான் காரணம் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்கும் படி உத்தரவு போட்டிருந்தார் பிக் பாஸ்.

அதன்படி அனைத்து போட்டியாளர்களும் தங்களது சோகக்கதை சொந்த கதையை கூறி வந்தார்கள். அதேபோல் ரம்யா பாண்டியன் தன்னுடைய சோக கதையை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் ரஜினி முருகன் இயக்கத்தில் தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ஜோக்கர் திரைப்படத்தில் நடிகையாக நடித்திருந்தேன். ஆனால் அந்த படத்திற்கு கிடைத்த புகழ் அளவில் கொஞ்சம் கூட தனக்கு கிடைக்கவில்லை என ஓப்பனாக பேசினார்.

பிறகு ஊருக்கு போயிட்டு வந்த பொழுது கண்ணாடியில் ஏதோ லேசாக உரசியது போல் தான் ஆனால் அப்பாவுக்கு இரண்டு நாளில் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதன்பிறகு அவரை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றறார்கள்  டாக்டர் அவரை பாம்பு கடித்து விட்டது எனக் கூறினார் ஆனால் உடனடியாக காப்பாற்றவில்லை என்றால் இறந்துவிடுவார் என கூறினார்.

சரியாக அவரை கவனிக்காததால் கிட்னி பெயிலியர் ஆகி நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் அதன் பிறகு சொந்த காலில் நிற்க வேண்டிய சூழ்நிலை என்ன செய்வது என்று தெரியவில்லை, பிறகு சத்யம் தியேட்டர் வாசலில் வர்றவங்க போறவங்க வேலைக்கு டேபிளட்ஸ கொடுக்கும் வேலை தான் கிடைத்தது அப்பொழுது சம்பளம் 2500 தான்.

பெரிய சம்பளம் கூட இல்லை ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது அதன்பிறகு இதுவும் ஒருவேளை தான் என செய்ய ஆரம்பித்தேன், தன்னுடைய பிரண்டு கூட துணைக்கு மேக்கப் டெஸ்ட் போனேன், அப்பொழுது என்னை பார்த்த காஸ்டிங் டைரக்டர் ஒருத்தர் உங்களுக்கு போட்டோ ஃபேஸ் நீங்கள் நடிக்கிறீர்களா எனக் கேட்டார் வீட்டில் சொன்னதற்கு முடியாது எனக் கூறி விட்டார்கள் அடம் பிடித்தேன் அதன்பிறகுதான் அந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டேன்.

பிறகு என்னை பார்த்த இயக்குனர் நீங்கள் தான் ஹீரோயின் என கூறினார் எனக்கு தலை கால் புரியவில்லை. அதன் பிறகுதான் ஜோக்கர் படத்தில்  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பிறகு மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போட்டோஷூட் நடத்தினேன் அதன்மூலம் சில வாய்ப்புகள் கிடைத்தது பிரபலமும் அடைந்தேன் எனக் கூறினார்.

ரம்யா பாண்டியன் அப்பாவின் கதையை கூறும்போது சோகமாக இருந்த போட்டியாளர்கள் பின்பு சந்தோசமாக மாறினார்கள். பிக் பாஸ் வீட்டில் நடிகை ரேகா கேப்ரியலா, அஜித், சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் பேசும்போது பெருசாக கண்ணீர் வர மாதிரி சோகக்கதை எதுவும் கிடையாது அதனாால இவங்களை எல்லாம் எலிமினேட் செய்ய நாமினேட் செய்துள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version