சின்னப் பையனாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்.! பரபரப்பைக் கிளப்பிய ரம்யா பாண்டியன்.! படையெடுக்கும் வாண்டுகள்.!

பொதுவாக சினிமா என்றாலே ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டு அவருடன் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை பிடித்திருந்தால் வாழலாம் இல்லை என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.அதுமட்டுமல்லாமல் நடிகைகள் என்றால் தன்னை விட 10 வயது குறைவாக இருந்தாலும் கூட திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

சினிமாவில் மட்டும் அவரவர்களுக்கு பிடித்தாற்போல் வாழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் திருமணத்தைக் குறித்து பேசிய பொழுது அவர் அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரம்யா பாண்டியன் தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே போட்டோ ஷூட் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதற்கு முன்பு தமிழ் இவர் டம்மி பட்டாசு, ஆண்தேவதை போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் இவர் நடத்திய போட்டோ ஷூட் தான் இவருக்கு வெற்றியைத் தந்தது.

இவர் நடித்திருந்த அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாகவும் பிரபலம் அடையவில்லை ரம்யா பாண்டியனுக்கு என்று ஒரு தனி அடையாளத்தையும் தரவில்லை.

அதன் பிறகு தான் தொடர்ந்து இவர் போட்டோ ஷூட் நடத்தி இளசுகள் மத்தியில் குடியேறினார்.  ரம்யாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எங்களுடைய போதை என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் மீடியாவில் பிரபலமடைந்தார். பிறகு காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  இந்த நிகழ்ச்சியின் மூலம் சிங்கப் பெண்ணே என்ற பெயருடன் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவருக்கு எவ்வளவு தான் கஷ்டங்கள் வந்தாலும் அதனை சிரித்துக்கொண்டே சமாளிக்கும் திறமைவுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களை விட வயதில் கம்மியாக இருந்தால் அந்தப் பையனை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு தான் வயதை பெருசாக நம்பவில்லை மனதிற்கு பிடித்திருந்தால் ஓகே தான் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது  சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment