நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். அதனைத்தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தவித்து வந்தார் ரம்யா பாண்டியன். ஒரு காலகட்டத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழலாம் என்ற டயலாக்கை போல் ரம்யா பாண்டியன் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் மொட்டை மாடியில் பச்சை கலர் புடவையில் தனது இடுப்பு மடிப்பு தெரியும்படி முதன்முறையாக போட்டோ ஷுட் நடத்தினார். அந்த புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தனது பக்கம் இழுத்தவர்.
அதிலிருந்து இவரை இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என்று தான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அவர் புகை படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட இவர் நடித்த படத்திற்கு கிடைக்கவில்லை இதனை அவரே பலமுறை கூறியுள்ளார்.
அதன் பிறகு ரம்யா பாண்டியன் பல தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்.
ரம்யா பாண்டினுக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்பதால் வெப்சீரிஸ் பக்கம் தனது தாகத்தைத் தீர்ப்பதற்காக நடிக்க கிளம்பிவிட்டார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆபீஸ் மற்றும் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் கார்த்திக் நடித்துள்ள முகிலன் என்ற வெப் சீரியஸில் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார்.
அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் வெறும் ஜாக்கெட்டுடன் நின்று கொண்டிருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் இந்த அளவு கவர்ச்சி காட்டுகிறீர்களே உங்களுக்கு பட வாய்ப்பு குவியப் போகிறது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

