வெள்ளை நிற புடவையில் தேவதை போல் ஆர்யா பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்!! வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

0

ramya pandiyan maharasapatinam song video: மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓர் இரவிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ஃபேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சமுத்திரகனி உடன் இணைந்து ஆண்தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் பிரபலத்தை தரவில்லை. ஆனால் இவரது போட்டோ ஷூட் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். தற்போது இவருக்கு என இணையதளத்தில் ரசிகர் பட்டாளமும் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற காமெடியான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அந்த காமெடி ஷோவின் புரோமோ இணையதளத்தில் வெளியானது ஆனால் அதில் ரம்யா பாண்டியன் இல்லை எனவே ரசிகர்கள் அனைவரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தை தேவையில்லை என்ற பாடலுக்கு வெள்ளை நிற புடவையில் தேவதை போல் அழகாக வலம்வரும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த வீடியோ.