2016ஆம் ஆண்டு ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகிய அற்புதமான திரைப்படம் ஜோக்கர், இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் பெற்றது, இந்த காலத்து அரசியல் வாதிகளையும் ஊழல் அதிகாரிகளையும் தைரியமாக எதிர்த்து பேசிய திரைப்படம்.

படத்தில் கதாநாயகியாக மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன், இவர் திருநெல்வேலியில் பிறந்தவர், தனது பள்ளிப்படிப்பை அனைத்தையும் திருநெல்வேலியில் முடித்துவிட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயர் படித்து முடித்தார் இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் டம்மி டப்பாசு என்ற திரைப்படம் தான்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பு மானே தேனே பொன்மானே என்ற குறும் படத்தில் நடித்திருந்தார், ஜோக்கர் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது இவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது ஆனால் இவருக்கு தற்போது பட வாய்ப்பு இல்லை என்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும் இவர் ஒரு மாடலாக தான் இருக்கிறார், இந்த நிலையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

புடவையில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டார் அதற்கு ரசிகர்கள் நடிப்பு வரலை ஆனா மடிப்பு வந்துடுச்சு என கிண்டல் அடித்து வருகிறார்கள்.
