பார்ப்பதற்கு எல்லாம் அழகாக தெரிய அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் தற்போது கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸான நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பது பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைய முடியாத அல்லது பிரபலமடைந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த பலருக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் பட்டாசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதனைத்தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை, முகிலன் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். ஆனால் எந்த திரைப்படங்களும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலம் அடையாத காரணத்தினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை .

இந்நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் இடுப்பு தெரியும்படி மொட்டைமாடியில் எடுத்த ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டு சின்னத்திரையில் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதில் சிரித்துக் கொண்டே இருப்பதாலு ஒரு கட்டத்தில் ஆரியிடம் நேராக சண்டை போடாமல் மற்றவர்களிடம் அவரைப் பற்றி குறை சொல்வதால் விஷ பாட்டில் உட்பட இன்னும் பல பெயர்களை ரசிகர்கள் வைத்தார்கள்.

இவ்வாறு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக செய்தி வெளிவந்தது .ஆனால் அது எந்த அறுவை சிகிச்சை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தார்கள். அந்த வகையில் ரம்யா பாண்டியனின் தங்கை திவ்யா இவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து உள்ளதாக கூறி உள்ளார்