நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது தன்னுடைய தோழிகளுடன் வியட்நாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் கடந்து சில நாட்களாக வியட்நாம் சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் சற்று முன்பு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது வியட்நாம் தெருகளில் சைக்கிள் ரைட் செய்யும் காட்சிகள் மற்றும் ஆற்றில் விளக்குகளை மிதக்க விடுவது, மற்றும் தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் க்யூட்டான அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.
இவ்வாறு ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லட்சக்கணக்கில் லைக்குகளும், கமாண்டுகளும் குவிந்து வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் ஆண் தேவதை, டம்மி பட்டாசு போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு சின்னத்திரையில் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி வந்தன் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதி வரையிலும் தாக்குப் பிடித்த இவர் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்த திரைப்படத்தில் கிராமத்துப் பெண் போல் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இவர் தற்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
