ரம்யா பாண்டியன் வீட்டில் இருந்து சினிமாவில் அறிமுகமாகும் மேலும் ஒரு நபர்.!

தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படங்களும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.  பிறகு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். ஆனால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக பதிந்தார் ஏனென்றால் இவர் இந்நிகழ்ச்சியில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் சிரித்தபடியே இருப்பதால் இவரின் இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.

தற்பொழுது இவர் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் இவரின் சகோதரர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இவரும் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் தற்பொழுது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாரார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Leave a Comment