பிஎம்டபிள்யூ காரை வாங்கி விட்டேன் என சந்தோசத்தில் புகைப்படத்தை வெளியிட்டார் ரம்யா பாண்டியன்.!

பொதுவாக சினிமாவில் எடுத்தவுடனே பிரபலமடைந்து விடமுடியாது. ஆனால் ஒரு சிலருக்கு ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட்டடித்து அந்த நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவார்கள்.

அந்தவகையில் ஆண் தேவதை, ஜோக்கர், டம்மி பட்டாசு போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இத்திரைப்படங்களில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் தனது இடுப்பு அழகு தெரியும் படி வெளியிட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். இந்த புகைப்படத்தின் மூலம் இவர் இப்படி பிரபலமடைந்து விடுவார் என்று இவரே நினைத்து இருக்க மாட்டார்.

அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட ஆரம்பித்தார் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

பிறகு விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும்  குக் வித் கோமாளி சீசன் ஒன்னில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பிறகு காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக் பாஸ்சீசன் 4 கலந்து கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

இதன் மூலம் இவருக்கு சூரியன் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதோடு இன்னும் சில படங்களிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார். அந்தக் காருடன் ரம்யா பாண்டியன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya pandiyan and BMW car
ramya pandiyan and BMW car

Leave a Comment