அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய ரம்யா பாண்டியன்.! மேடையில் ஆரவாரம் செய்த கல்லூரி மாணவர்கள்.

தமிழ் சினிமாவில்  டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் அதன்பிறகு ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த குக் வித் கோமாளி எனும்  நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலமாகவே அனைவருக்கும் தெரிய வந்தார். அதுமட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில்  நடுவராக பணியாற்றினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கேற்று  தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  ஆக்டிவாக இருக்ககூடிய நடிகை ஆவர்.

இதனிடையே சேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் ஆண்டு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளுடன் ரம்யா பாண்டியன் சேர்ந்து நடனம் ஆடியிருந்தார்.

அதுவும் தற்போது விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசையில் அமைந்த அரபிக் குத்து பாடலுக்கு மேடையில் ஏறி நடனம் ஆடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன் மேடையில் நடனமாடிய ஒவ்வொரு நிமிடமும் ஒட்டுமொத்த கல்லூரியும் ஆட்டம் போட்டு கொண்டடி மகிழ்ந்தது.

Leave a Comment