சூப்பர் ஸ்டார் பட்டமே எனக்கு தொல்லை தான்.. ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மேடைக்கு வந்து மைக்கை வாங்கி ரம்யா கிருஷ்ணன் செய்த தரமான சம்பவம்

Jailer audio launch: ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மைக்கை வாங்கி ரம்யா கிருஷ்ணன் பேசிய ஒரு டயலாக் அவங்கையே அதிர வைத்து இருக்கிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் எதிர்பாராத ஏராளமான விஷயங்களை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அப்படி ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் நெல்சன், கலாநிதி மாறன், ரம்யா கிருஷ்ணன் என பலரும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது குறித்த தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக இருந்து வருகிறது. அப்படி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசுகையில் என்றுமே சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான்.

ஹுகும் பாடலில் இடம்பெற்ற சூப்பர் ஸ்டார் என்கின்ற வார்த்தையை கூட நீக்க சொன்னதாக தெரிவித்தார். அப்போது கீழே அமர்ந்து ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் மைக்கை வாங்கி யாரும் எதிர்பாராத விதமாக படையப்பா படத்தில் நீலாம்பரி ரஜினிகாந்த் பார்த்து பேசும் வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்.. கூடவே பொறந்தது எங்கேயும் போகாது”! என பேசியது அரங்கையே அதிர வைத்தார்.

இவரை எடுத்து சூப்பர் ஸ்டார் குறித்து கலாநிதி மாறன் ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிவிட்டது இன்னும் அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள். அப்படி உங்களுக்கு 70 வயது ஆகும் பொழுது இதேபோல் மவுஸ் இருந்தால் கண்டிப்பாக நீங்களும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு அசைப்படுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் மேலும் இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார் சுனில் ஜாக்கி ஷெராஃப் யோகி பாபு ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

Leave a Comment