53 வயதிலும் சொத்தை மலை போல் குவித்து வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்.! எத்தனை கோடி தெரியுமா.?

Ramya krishnan : நடிகர் ரம்யா கிருஷ்ணன் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் இவர் நடிகர் சோ இராமசாமியின் உறவுக்கார பெண். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் 1985 ஆண்டு ஒய் ஜி மகேந்திரனுடன் இணைந்து வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படிக்காதவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார், பின்பு கமலஹாசன் உடன் பெயர் சொல்லும் பிள்ளை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸராக இருந்து வந்தவர் அதேபோல் அந்த காலத்திலேயே டபுள் ரோலில் நடித்து  அசத்தியவர்.

சிறிது காலம் சினிமாவில் இடைவெளி விழுந்தது அதனால் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் தெலுங்கு பக்கம் சென்றார் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் பிறகு மீண்டும் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகிய படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். மேலும் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதவாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார், அதேபோல் ரஜினியுடன் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார், இந்த நிலையில் தற்பொழுது ரம்யா கிருஷ்ணன் குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தொலைக்காட்சி தொடர் தொலைக்காட்சி ரியல் ஷோ என அனைத்திலும் அயராது உழைத்து வருகிறார்.

இப்படி 30 வருடமாக உழைத்து வரும் ரம்யா கிருஷ்ணனின் பேங்க் பேலன்ஸ் மிகவே பெரிதாக இருக்கும் என கூறுகிறார்கள், அந்த வகையில் இளம் ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான் ஒரு படத்திற்கு மூன்று கோடி முதல் நான்கு கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம் அதேபோல் சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம் இந்த நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறது அதுமட்டுமில்லாமல் பல நிலங்களையும் வாங்கி வைத்துள்ளாராம் கிட்டத்தட்ட ரம்யா கிருஷ்ணனுக்கு 98 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version