நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதை தாண்டி பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் என பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 15 வயதிலேயே சினிமா வாழ்க்கையை தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு முதன்முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்ஜிமகேந்திரன் உடன் நடித்தார் அப்பொழுது இவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
30 வருடங்களாக சினிமாவில் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், நாட்டிய பேரொளி பத்மினிக்கு பிறகு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்து நடித்துவரும் நடிகை என ரம்யா கிருஷ்ணன் வரலாறு படைத்துள்ளார்.
அதன்பிறகு 1985 ஆம் ஆண்டு படிக்காதவன், என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அதன்பின்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

பொதுவாக பல நடிகைகள் குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார் அல்லது கவர்ச்சியை காட்டி நடிப்பார்கள் ஆனால் இரண்டையும் ஒரு கலக்கு கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன், 35 வயதிலேயே பல நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாமல் போகும் ஆனால் 49வது வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில்கூட ரம்யா கிருஷ்ணன் குயின் வெப் சீரியஸில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷுட் புகைப்படம் ரசிகர்களை மெய் மறக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் பல நடிகைகள் 49 வயதில் எப்படி இன்னும் இளமையாக இருக்கிறார் என மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவ்வளவுதான் வர்ணித்து வருகிறார்கள்.
