பிரபல நடிகருக்கு தங்கையாகவும் மகளாகவும் மனைவியாகவும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்..! விட்டா அம்மாவா கூட நடிப்பாங்க போல..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன் இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாவில் மிகப் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழில் முதன்முதலாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்ற திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படிக்காதவன் மற்றும் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகிவிட்டார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனையை முறியடித்த ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 50வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். இவ்வாறு அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் சோசியல் மீடியாக்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறது.

என்னதான் வயதானாலும் நமது நடிகை என்றும் இளமையுடன் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இளமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு நடிகருடன் தங்கை மகள் மனைவி என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது நமது நடிகர் நாசர் தான் அந்தவகையில் ரம்யா கிருஷ்ணன் படையப்பா திரைப்படத்தில் நாசருக்கு தங்கையாக நடித்து இருப்பார் இதனைத்தொடர்ந்து பாகுபலி திரைப்படத்தில் நாசருக்கு மனைவியாக நடித்திருப்பார்  பின்னர் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நாசருக்கு மகளாக நடித்துள்ளார்.

ramyakirushnan-1
ramyakirushnan-1

இப்படி தனக்கென எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வயதானாலும் சரி அவருடைய ஸ்டைலும் அழகும் இன்றும் மாறவில்லை.

ramyakirushnan-0
ramyakirushnan-0

Leave a Comment