பிறந்தநாளை பார்ட்டி, சரக்கு என குஜாலாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்! அட பக்கத்துல இவங்களா..?

Ramya Krishnan : நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து படிக்காதவன், முதல் வசந்தம், சர்வம் சக்தி மையம், பெயர் சொல்லும் பிள்ளை, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் சென்றார் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இதனைத் தொடர்ந்து மலையாளம் திரைப்படத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்படி பல மொழிகளில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ண ஒரு காலகட்டத்தில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலி என்ற திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார்.

அது மட்டும் இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி இன்று ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய பிறந்தநாளை கோலாலமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ராதிகா அவர்களும் கலந்து கொண்டுள்ளார் தற்போது ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு 53 வயது ஆகிறது தன்னுடைய 53 வது பிறந்தநாளை ராதிகா சரத்குமார் அவர்களுடன் மது விடுதியில் கொண்டாடியுள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

radhika ramyakirishnan
radhika ramyakirishnan