அப்பவே அட்டை புகைப்படத்திற்கு ராணி போல கெட்டப் போட்ட ரம்யா கிருஷ்ணன்.! இளம் வயதில் ஜொலித்த புகைப்படம்.

ramya krishnan
ramya krishnan

மிகக் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் ஹீரோயினாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் இவரது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தியது என்னமோ வில்லி கதாபாத்திரங்களில் தான்.

அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான “படையப்பா” படத்தில் நீலாம்பரியாக தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார். அதை தொடர்ந்து பிரபாஸ் – ன் பாகுபலி படத்தில் சிவகாமி  கதாபாத்திரமும் மிரட்டும் வகையில் இருந்தது.

தற்போது கூட பல்வேறு திரைப்படங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்கு பெற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BB நிகழ்ச்சி தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்படி மீடியா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவதும் உண்டு. அந்த வகையில் இளம் பருவத்தில் இவர் அட்டைப்படத்திற்கு குட்டையான உடையில் ராணி போல் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் புகைப்படம்.

ramya krishnan
ramya krishnan