பிரபல டிவி நிகழ்ச்சியில் களமிறங்கிய ராஜமாதா.! இனி டிஆர்பி எங்க பக்கம் தான் என தலைகால் புரியாமல் ஆடும் தொலைக்காட்சி.!

0

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட வயது அல்லது அவர்களின் இளமை குறையும் வரை மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும்.  எந்த நடிகையாக இருந்தாலும் அவரின் அழகு தான் முக்கியம்.

ரசிகர்களும் ஒரு நடிகை மிகவும் அழகாக இருந்தால் மட்டுமே அவர்களை முன்னணி நடிகைகளாக ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தனது அழகினாலும்,சிறந்த நடிப்பினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தார்.

பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து துணை நடிகையாகவும், அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வரும் இவர் சில காலங்களுக்கு முன்பு வெளிவந்த வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார். ஆம், அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக் பாஸ் சீசன் 4 வரையிலும் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் ஜோடியாக நடனமாக இருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு BB jodigal என்று பெயர் வைத்துள்ளார்கள். அந்த வகையில் அண்மையில் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் நடுவராக பணியாற்றவுள்ளார்.