ராட்சசன் 2 படம் எடுக்கபோறதுக்குள்ள வேறு ஒரு நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் ராம்குமார்.! அப்புறம் தான் விஷ்ணு விஷால்.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்கும் வகையிலான ஒரு படத்தைக் கொடுத்து அவரை பிரபல வைத்தவர் இயக்குனர் ராம்குமார்.

இவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியாகியிருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

இதனால் பல்வேறு இயக்குனர்களும் விஷ்ணு விஷாலுக்கு பட வாய்ப்பை கொடுக்கின்றனர் ஏனென்றால் இந்த திரைப் படத்தில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது இவரைப்போலவே இந்த திரைப்படத்தில் நடித்த வில்லன் மற்றும் அமலாபால் ஆகியோரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மக்கள் பலரும் இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியில் வந்தால் மிக சிறப்பாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த கூட்டணி வெகுவிரைவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்குள் இயக்குனர் ராம்குமார் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை கொடுக்க உள்ளார்.

ஒரு சிறப்பான கதையை தனுஷிடம் ஏற்கனவே அவர் சொல்லி இருந்தாராம் அது தற்பொழுது ஒர்க் அவுட் ஆக உள்ளதால் ராட்சசன் படத்திற்கு முன்பாக தனுஷுடன் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராம்குமார் தயாராகியுள்ளார் அதன்பிறகுதான் இவர் விஷ்ணு விஷாலுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து ராட்சசன் 2 திரைப்படத்தை எடுப்பார் என தெரியவருகிறது.

எது எப்படியோ விஷ்ணு விஷாலுக்கு அடுத்து ஒரு படம் ஹிட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment