ரமேஷ் திலக் மனைவி ஒரு நடிகையா.? வைரலாகும் திருமண புகைப்படம்

Ramesh Thilak : சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தும் நடிகர், நடிகைகளை எப்படி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறமோ அதே போல குணசத்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்களையும் தற்பொழுது கொண்டாட ஆரம்பித்துள்ளோம் அந்த வகையில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் ரமேஷ் தில்க்.

இவருக்கு தற்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. முதலில் மங்காத்தா படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு சூது கவ்வும், நேரம், வாயை மூடி பேசவும், டிமான்ட்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம், காதலும் கடந்து போகும், கபாலி, டிக் டிக் டிக், இமைக்கா நொடிகள்..

விசுவாசம் என இவர் தேர்ந்தெடுத்த நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெற்றன கடைசியாக இவர் நடித்த  குட் நைட் படம் கூட பெரிய  வெற்றியை ருசித்தது அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி நடிகர்  ரமேஷ் திலக்..

பிரபல வானொலி சேனல் ஒன்றில் RJ -வாக பணியாற்றி பின் சினிமாவிற்கு வந்த  RJ நவலட்சுமி என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவரது திருமணத்திற்கு உறவினர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Ramesh Thilak
Ramesh Thilak

குறிப்பாக சினிமா தரப்பில் இருந்து ஸ்ரீபிரியா, நடிகர் நகுல் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார். திருமணம் மிக எளிமையான முறையில் நடந்தது. ரமேஷின் திலக்கின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த திருமண புகைப்படத்தை..

Ramesh Thilak
Ramesh Thilak