திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி.! ராம்சரணின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராம்சரண் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில் இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தெலுங்கு சினிமாவில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமான ராம்சரண் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல கோடி வசூல் சாதனையையும் நடத்தி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகமே கொண்டாடிய படம்தான் ஆர் ஆர் ஆர்.

இந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் மிகப்பெரிய பிரபலமான நிலையில் பாட்டு மட்டுமே பல கோடி வசூல் செய்தது மேலும் குழந்தை நட்சத்திரங்களும் முதல் முன்னணி பிரபலங்கள் வரை பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள் அந்த அளவிற்கு மக்களால் இந்த பாடல் கொண்டாடப்பட்டது.

இவ்வாறு புகழ்பெற்ற இந்த பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருதனையும் இசையமைப்பாளர் பெற்றார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா காமினேனியை ராம்சரண் திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து ராம்சரணின் மனைவி உபாசனா கர்ப்பமாகி இருக்கிறார்.

இவ்வாறு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வரும் ராம்சரண் சினிமாவிலும் அடுத்தடுத்து படு பிஸியாக படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது அவருடைய சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராம்சரண் ஒரு படத்திற்காக தற்பொழுது 45 கோடி சம்பளமாக பெற்று வரும் நிலையில் இதுவரையிலும் இவர் 1370 கோடியை அளவில் சொத்து சேர்த்துள்ளாராம்.

ram charan
ram charan

இவ்வாறு இவருடைய மனைவி சினிமாவில் இல்லை என்றாலும் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவருடைய வருமானத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2500 கோடி ரூபாய் ஏறத்தாழ இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 35 கோடியில் ஹைதராபாத்தில் பங்களா, தனி ஜெட் விமானம் மற்றும் விலை உயர்ந்த கார்கள், பைக்கள் போன்றவையும் வைத்துள்ளாராம்.

பிறகு பெப்சி, டாடா டொகோமோ, ப்ரூட்டி, மெட்டோக்ரோப் உள்ளிட்ட 35 விதமான பிராண்டுகளுக்கு அம்பேஸ்டராக தலா 1.8 கோடி அளவில் சம்பளமாக பெற்று வருகிறாராம். இவ்வாறு தற்பொழுது சங்கர் படத்தில் நடித்து வரும் ராம்சரண் ரூபாய் 100 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

Leave a Comment