ராம் சரண் பிறந்தநாளுக்கு RRR படக்குழு கொடுத்த பரிசு.! பட்டைய கிளப்பும் மாஸ் வீடியோ!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி.இவர் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ராஜமௌலி அவர்கள் 2001 ஆம் ஆண்டு ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார், இதுவே அவருக்கு முதல் படம் ஆகும். இதனைத் தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் அதிலும் குறிப்பாக மகதீரா, நான் ஈ, மரியாத ராமண்ணா, ராஜண்ண போன்ற வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார்.

இதையடுத்து 2015ஆம் ஆண்டு பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய திரைப்பட அளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் உலக அளவிலும் பேசபட்ட படமாக இது அமைந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் ,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜமௌலி பாகுபலி இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார்.

இப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராம்சரண் அவர்களை வைத்து தற்போது RRR என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

ரத்தம், ரணம், ரவுத்திரம் என்று தலைப்பு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் 400 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுக்க தாமதம் ஆகி உள்ளதால் இப்படம் 2021 ஜனவரி எட்டாம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் சமுத்திரகனி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது மட்டுமிள்ளமால் இரண்டு பாடல்களும் வெளியாகியது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.இந்த நிலையில் ராம் சரண் அவர்கள் நேற்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.இதனை முன்னிட்டு ”RRR ” படக்குழுவினர் சீதா ராமராஜுவாக நடித்துள்ள ராம் சரணின் இன்ட்ரோ காட்சி வெளியாகியுள்ளது.

இதனால் ராம் சரண் ரசிகர்கர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.RRR படக்குழுவினர் ராம் சரண் பிறந்தநாள் சார்பாக வெளிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ

Leave a Comment