அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல இயக்குனர்கள் சிறந்த படத்தை எடுக்க ஆசை படுகின்றனர். ஆனால் இவர்களுக்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து உள்ளவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் மீண்டும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது திசையை தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார்.
இப்பொழுது தெலுங்கு டாப் நடிகர் ராம்சரனை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திற்கு பெயர் வைக்காமல் ராம்சரனின் 15வது படம் என தற்போது அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் பல டாப் நடிகர்கள் நடிக்கின்றனர் நடிகை அஞ்சலி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவருகின்றன.
இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினம் பொது இடங்களில் அனுமதியுடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ராம்சரண் புதிய கெட்டப் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதைக்கண்ட படக்குழு தற்போது செம கடுப்பில் இருக்கிறாராம். படக்குழு எவ்வளவுதான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில புகைப்படங்கள் இப்படி வெளியாவது வழக்கமாக இருக்கிறது இது ராம்சரண் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம்.
Stylish @AlwaysRamCharan Anna#RC15 shooting in vizag pic.twitter.com/2BHD7RHBNl
— KALKI |RRCF COMRADE (@DhruvaKalki) May 5, 2022