சினிமாவில் எம்.ஜி.ஆரின் வழியை பின் பற்றியதால் தான் ரஜினி,கமல் போன்ற நடிகருக்கு டஃப் கொடுத்தார் ராமராஜன்.!

90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் ராமராஜன். இவர் இளம் வயதிலிருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார் ஆனால் இவர் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் முதலில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையை பார்த்து வந்த பிறகு பின்னாட்களில் இயக்குனர்களிடம் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்து அதனை தெளிவாக கற்று அதன் பின் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

அதன்பின் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ரஜினி ,கமலுக்கு ஈடு இணையாக வலம்வந்தார் அந்த வகையில் 1986ம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரும்பாலும் எம்ஜிஆர் படத்தின் கதையைபோல இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவர் வெகுவிரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார் அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை நடுநடுங்க வைத்தார்.

இந்த நிலையில் தமிழ் சினிமா அவரை மேலும் உயரத்தில் தூக்கி அழகு பார்த்தது அந்த வகையில்  கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நபராகக் காணப்பட்டார். இந்தநிலையில் நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தாலும் சில பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு தனது பிள்ளைகளுக்கு திருமணம் சிறப்பாக செய்து வைத்தார் ராமராஜன்.

சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இதை நன்கு உணர்ந்து கொண்ட ராமராஜன். எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்பதால் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக மாறினர். இருப்பினும் சினிமாவில் அவ்வபொழுது குணச்சித்திர வாய்ப்புகள் மற்றும் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தன இருப்பினும் சுத்தமாக வேண்டாம் என ஒதுக்கினார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு மேதை என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தலது விடலாம் என கணக்கு போட்டார்.

ramarajan
ramarajan

ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து ஒரு சினிமா உலகில் பல இயக்குனர்கள் அவரை நடிக்க கூப்பிட்டார்கள் நான் ஒரு ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் நடித்துள்ளேன் இப்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு விருப்பமில்லை என கூறி அதிலிருந்து விலகினார் மேலும் தமிழ் சினிமாவில் காணப்படவில்லை. தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா கொண்டாடிய நாயகனை தக்கவைத்துக்கொள்ள பலவற்றை செய்தாலும் அதனை எல்லாம் நிராகரித்து தனக்கான  பயணித்து வருகிறார் ராமராஜன்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment