நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு கன்னட, தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தவர்.
இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக இவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தடையற தாக்க என்ற திரைப்படத்திலும் புத்தகம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
ஆனால் தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு முதலில் பிரபலமடையவில்லை அதனால் தெலுங்கு பக்கம் சென்று பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் பின்பு மீண்டும் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் தனது ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதுமட்டுமில்லாமல் சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது ஹிந்தியில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழில் அயலான் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.
அதேபோல் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள யோகா ஜிம் ஒர்க் அவுட் என அனைத்தையும் செய்து வருவார் அந்த வகையில் அடிக்கடி யோகா செய்த புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்