விஜய் டிவிக்கு டாட்டா காட்டிய சீரியல் நடிகை ரக்ஷிதா – இப்ப எங்க தாவி இருக்காரு.. தெரியுமா.? வெளியான வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் போன்ற சீரியல்கள் மூலம் நடித்து ரசிகர்களிடயே பிரபலமடைந்தவர் ரக்ஷிதா. பின்பு ஒரு கட்டத்தில் இவர் நடித்துவந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் இவருடன் இணைந்து கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்பு குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக ஜொலித்து அதேசமயம் சீரியல்களையும் கைவிடாமல் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்தவகையில் கடைசியாக இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடிகர் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் மிக முக்கியமாக காட்டப்பட்டாலும் ஒருகட்டத்தில் இவருக்கு பெரிதும் ரோல் இல்லாமல் இருந்தது.

அதனை அடுத்து  சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலே விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரக்ஷிதாவிற்கு பதில் வேறு ஒரு பிரபலமும் மாற்றப்பட்டு இந்த சீரியல் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து பணியாற்றி வந்த இவர் தற்போது வேறு ஒரு சேனலுக்கு மாறியுள்ளார். அந்த வகையில் நடிகை ரக்ஷிதா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் கணவனை இழந்து இரண்டு குழந்தைக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த சீரியல் கூடிய விரைவில் ஒளிபரப்பாக உள்ள ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.  அதனை அடுத்து ரசிகர்கள் பலரும் விஜய் டிவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ரக்ஷிதா அந்த சீரியலில் இருந்து வெளியேறி தற்போது இவ்வளவு பெரிய குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் யோசித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment