கை ரெண்டையும் விட்டுவிட்டு ராயல் என்ஃபீல்டில் பறந்து சென்ற ரக்ஷிதா.! வைரலாகும் வீடியோ..

rachitha
rachitha

சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமடைந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த வந்தவர் தான் ரக்ஷிதா இவர் இரண்டு கையையும் விட்டுவிட்டு ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒய்யாரமாக ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் பலரும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து வந்தவர் ரக்ஷிதா இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர். இவர் இந்த சீரியலை தாண்டி சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனிலும் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஜூனியர் சீனியர், நாச்சியபுரம்,  அம்மன், செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், என பல சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இவர் சிறப்பாக விளையாடி 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில்  இதுவரை பதிவு செய்யாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்பொழுது பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் சற்று முன் ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் மிகவும் ஸ்டைலாக பைக் ஓட்டும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் ரோட்டின் நடுவிலேயே சென்று அசால்டாக இரண்டு கைகளையும் விட்டுவிட்டு பைக் ஓட்டி செல்கிறார் இது பெரும் அதிருப்தியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் பார்த்து கீழே விழுந்திட போறீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.