புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜு – கலக்கலான பேச்சு, நடனத்தின் மூலம் மற்ற போட்டியாளர்களை மகிழ்வித்த சம்பவம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன்  சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்ததை  அடுத்ததாக இப்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் புதிதாக  தொடங்கப்பட்டு OTT தளத்தில் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அண்மையில் முடிந்தது இதில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்த நடிகர் ராஜூ டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை வென்று அசத்தினார். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் ஒரே மாதிரியாக இருந்து மக்களை ஒரு பக்கம் தனது காமெடியின் மூலம் மகிழ்வித்து அசத்தினார்.

டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்ற பிறகு வெளியே வந்தோம் தனக்கு உதவிய நண்பர்கள் மற்றும் முக்கியமானவர்களை நேரில் சந்தித்து பேசி அசத்தினார். வெளியே வந்த அவருக்கு நிச்சயம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் 5.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்களை அனைவரையும் ஒன்று சேர்த்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்று புதிதாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறது  இதில் ராஜூவும் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியது நான் டைட்டில் வென்று அதை நம்புவதற்கு எனக்கு நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுத்தாரா இல்லையா.. மறந்துவிட்டார்கள் என்று நகைச்சுவையாக அவர் பேசிய ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் ராஜுவின் கலக்கல் பேச்சு மற்றும் டான்ஸ் வீடியோ..

Leave a Comment