சினிமா பாடம் கற்றுத்தந்த பாக்யராஜ் மற்றும் நெல்சன்னுக்கு “பிக்பாஸ் கோப்பையை” கொடுத்து அழகு பார்த்த ராஜு.! வெளிவந்த சூப்பர் புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி அண்மையில் நிறைவுபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ராஜு ஜெயமோகன். இவர் கனா காணும் காலங்கள், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். மேலும் இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் சிஷ்யன் ஆவார்.

இவர் தமிழில் சீரியல்கள் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து வெள்ளித்திரையில் இயக்குனராகவும் நடிகராகவும் பயணிக்க வேண்டும் என்பதே ஆசையாக வைத்திருந்தார். அந்த வகையில் இவரது நண்பன் கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வந்தார்.

பின்பு இவருக்கு பெரிதும் திரைப்படங்கள் ஏதும் கிடைக்காததால் ஒருகட்டத்தில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது அதை பயன்படுத்திக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆம் அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இவரது என்டர்டைன்மென்ட் போட்டியாளர்கள் மற்றும் மக்களை மிகவும் ரசிக்க வைத்தது.

மேலும் பிக் பாஸ் ஹவுஸ் மேட் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது ராஜு தான். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று ராஜு பிக் பாஸ் டைட்டிலை வென்றார். மேலும் 50 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ராஜு தற்போது சில நேரலையில் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில் ராஜு பிக் பாஸ் கோப்பையுடன் இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலிப்குமாரை சந்தித்துள்ளார். ராஜு பிக்பாஸ் கோப்பையை நெல்சன் மற்றும் பாக்யராஜ் கையில் கொடுத்து அழகு பார்க்கும் புகைப்படங்களை ராஜு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

bakiya raj and raju
nelson and raju

Leave a Comment

Exit mobile version