ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான ரஜினியின் வீடியோ.! தலைவர் செம மாஸ்..

ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூரில் தொடங்கியது. இதனை அறிந்த ரஜினியின் ரசிகர்கள் கும்பல் கும்பலாக சூட்டிங் ஸ்பாடிற்கு படையெடுத்தை பார்க்கும் போது படையப்பா  படத்தை ரியலில் காட்டினார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கி வருகிறார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளையில் இருந்து வந்த ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த்  ரவி, விநாயகன், யோகி பாபு, மற்றும் சிவக்குமார், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதேபோல் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், தமன்னா, பிரியங்கா மோகன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடலூர் புதுவை எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பாலத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தில் அமைந்த சண்டை காட்சிகள் பாலத்தில் படமாக்கப்பட்டன. இதில் ரஜினியுடன் துணை நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

படையப்பா படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து ரம்யா கிருஷ்ணனுடன் இந்த படத்தில் நடிக்கிறார் இதனால் படையப்பா பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ரஜினி முதல் முதலாக கடலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தலைவா தலைவா எனக்கு கூச்சலிட்டு வருகின்றனர்.

கடலூர் மற்றும் புதுச்சேரி ரசிகர்கள் ரஜினியை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்த போது ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் பொதுமக்களை மறித்து அப்படியே திருப்ம்பி அனுப்பி வைத்தனர் இதனால் ரஜினியை பார்க்க முடியாமல் ஏமாற்றுடன் திரும்பினார்கள்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment