ஒரு நாள் கால் ஷீட்டிற்கு ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா.? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஓடவில்லை. அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார் நடிகர் ரஜினி. அந்த வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று போராடுகிறார் அது மட்டும் இல்லாமல் இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் அவரும் எப்படியாவது அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

இப்படி இயக்குனரும் நடிகரும் இந்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று போராடிவரும் நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு 4 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்த உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏழு நாட்கள் கால் சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் ஏழு நாட்களுக்கு 270 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அந்த வகையில் ஒரு நாளைக்கு 4 கோடி சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment