ரஜினியின் மாஸ் காட்சிகள் “பாட்ஷா” படத்தில் உள்ள தவறுகளை மறைத்து விட்டன – கே எஸ் ரவிகுமார் வெளிப்படை.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் இவர் சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் இயக்கவில்லை அதையும் தாண்டி நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் குறித்து பேசி வந்தார்.

அதில் ஒன்றாக பாட்ஷா படத்தை பற்றியும் அவர் பேசினார். 1995 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் “பாட்ஷா” இந்தப் படம் ரஜினியின் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடியது மேலும் அதிக வசூலை ஈட்டிய படமாக அப்பொழுது பார்க்கப்பட்டது.

ரஜினியின் பெரும்பாலான படங்கள் காதல், காமெடி மற்றும் ஆக்சன் ஆகிய படங்களை இருக்கும் ஆனால் பாட்ஷா படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிகமாக இருக்கும் படமாக இருந்தது. படத்தின் கதைக்கு எப்படி எப்படி ரஜினி அமைந்தாரோ அதேபோல வில்லன்களும் அமைந்தனர் ஆனந்தராஜ், ரகுவரன் ஆகியோர இணைந்து இந்த படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்தது.

ஒரு வழியாக படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரஜினியும், கேஎஸ் ரவிக்குமாரும் பார்த்துள்ளனர் பார்த்துவிட்டு வெளியே வந்து கே எஸ் ரவிகுமார் இந்த படத்தின் சில குறைகளை கூறி உள்ளார் என கேட்டதற்கு நீங்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் நீங்கள் இளமையாக இருப்பது போலவே நாங்கள் காட்டி உள்ளோம்.

ஆனால் ரகுவரனும் கடைசி காட்சிகளில் வயதானவர் போல காட்டு இருக்கிறோம் இதை படத்திற்கு பாதிக்கும் என சொல்ல அது எல்லாம் ஒன்றும் இருக்காது எனக்கு மிக அழுத்தமாகவும் கதாபாத்திரம் இருப்பதால் ரசிகர்கள் அது கண்டு கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார் இருந்தார் கே எஸ் ரவிக்குமாருக்கு சிறிது குழப்பம் இருந்தது படம் வெளியாகி நன்றாக ஓடியது மேலும் ரஜினியின் சீன்களை ரசிகர்கள் பெரிதும் கவர்ந்து இழுத்தால் ரகுவரனின் அந்த வயதான தோற்றத்தை அப்பொழுது கண்டுகொள்ளவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கே எஸ் ரவிகுமார் சொன்னார்.

Leave a Comment

Exit mobile version