சாகச நாயகனை மிஞ்சும் ரஜினிகாந்த்தின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ மிரள வைக்கும் ப்ரோமோ!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் ரஜினி. தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோயினாக நயன்தாரா அவர்களும் மற்றும் கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி ,சதீஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது.

சமிபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சில மாதங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார்.அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

டிஸ்கவரி சேனலில் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்தயாவில் இருந்து பிரதமர் மோடி மற்றும் பல முன்னணி நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குஏற்றிந்த நிலையில் தற்பொழுது ரஜினி அவர்களும் இணைந்துயுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் சாகச நாயகனாக இருக்கும் பேர் கிரில்ஸ். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர்கள் கிரில்ஸ்வுடன் இணைந்து சாகச பயணம் மேற்கொண்டுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Comment