ஷாருக்கானின் ரெக்கார்டை கண்ணாடி போல் சுக்குநூறாக உடைத்த ரஜினியின் ஜெயிலர்

Jailer Movie New Record : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார்  அந்த வகையில் கடைசியாக நெல்சன் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன்..

யோகி பாபு, சுனில், தமன்னா, ரெடின் கிஙஸ்லி  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்  படம் பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி  புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வெற்றியால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, இயக்குனர் நெல்சன் திலிப் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியவர்களுக்கு செக் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்தார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலான நிலையில் ஜெயிலர் திரைப்படம் அடுத்ததாக OTT தளத்திலும் ரிலீஸ் ஆகி அங்கேயும் சாதனையை படைத்து வருகிறது.

இந்த நிலையில் மலேசியாவில் ஜெயிலர் திரைப்படம் ஒரு புதிய சாதனை படைத்திருப்பதாக ஐங்கரன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதாவது ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் இதற்கு முன்பு வெளியான எல்லா இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஷாருகானின் தில்வாலே திரைப்படம் மலேசியாவில் 5.5 மில்லியன் மலேசியா ரிங்கட் வசூலித்து முதலிடத்தில் இருந்தது அதனை ஜெயிலர் முறியடித்து உள்ளதுது. இதோட முடிய போவதில்லை இன்னும் ரெக்கார்டு செய்யும் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்பொழுது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த தகவலை நீங்களே பாருங்கள்.