50 கோடி வசூலித்த இடத்தில் இப்பொழுது 10 கோடிக்கு தள்ளாடும் ரஜினியின் அண்ணாத்த.? தலைவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

0

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் ஒரு நடிகர். அந்த மொழியையும் தாண்டி மாற்ற மொழி மற்றும் வெளிநாடுகளிலும்  பிரபலம் அடைவது வழக்கம். ஏன் நாம் கூட படம் சிறப்பாக இருந்தால் கஹாலிவுட் படங்களை பார்த்து மகிழ்கிறோம்  அது போலவே தான் தமிழ்நாட்டு படங்களும் உலக அளவில் வலம் வருகின்றன.

அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் அந்த மொழியைத் தாண்டி உலக அளவிலும் பிறமொழிகளிலும் மாஸ் காட்டுவது வழக்கம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு தற்போது ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆம் ரஜினியின் படங்கள் வெளிவந்தால் வெளி நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே ரஜினியின் படங்கள் நல்ல வசூலை அள்ளும்.

போதாக்கறைக்கு தமிழ் நாட்டை சுற்றி உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இதுவரை பல கோடிகளை அள்ளி புதிய சாதனை தான் ரஜினியின் படங்கள் படைத்துள்ளன. சமீபத்திய ரஜினியின் படங்கள் கூட பிற மொழிகளில் 50 கோடியை எல்லாம் தொட்டு உள்ளது ஆனால் இப்பொழுது 10 கோடியை தொட தொட வருவதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படம் இதுவரை 200 கோடியை அள்ளிய விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் உண்மையில் முதல் மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூலை அள்ளியது அண்ணாத்த அதன் பின் தொடர் மழையின் காரணமாக திரையரங்குக்கு மக்களின் வரவேற்பு குறைந்தது என கூறியது திரையரங்கு மேலும் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி வெகு விரைவிலேயே ஓரிரு திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டு தனது ஓய்வை அறிவிப்பார் என பிற மொழியான தெலுங்கு பக்கம் திரை உலகினர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.