பொதுவாக நடிகர்கள் என்றால் 60 வயதானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அந்த வகையில் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களில் அதிக வயதான நடிகராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவருக்கு வயதாகியிருந்தாலும் கூடாது பெரிதாக தெரியாமல் தனது சிறந்த நடிப்பின் மூலம் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவரின் நடிப்புத் திறமை மற்றும் ஸ்டைல் இரண்டும் கொஞ்சம் கூட மாறாமல் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போழுது சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.பிறகு தற்போது தான் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பிறகு ரஜினிகாந்தின் முறை பெண்களாக மீனா மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபல திரை பிரபலங்கள் அனைவரும் இணைந்து நடிப்பதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டில் முறுக்கு மீசை, கருப்பு தாடிவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
